Last Updated:

இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடிக்கும்.

இந்தியா - நியூசிலாந்து
இந்தியா – நியூசிலாந்து

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடந்து வருகின்றன. குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் குரூப் பி-யில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று நியூசிலாந்து அணியுடனான போட்டியில், இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது. போட்டி தொடங்கிய 10 ஓவருக்குள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து மோசமான நிலையில் உள்ளது. நியூசிலாந்து பவுலர்களும் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடிக்கும். இதையடுத்து, குரூப் பி-யில் 2ஆவது இடத்தில் உள்ள அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாடும். அப்படியென்றால், நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், இந்தியா தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதும். வெற்றி பெற்றால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் சூழல் உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும், குரூப் ஏ-வில் உள்ள மற்ற அணிகளை வென்று ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளன. மறுபுறம் குரூப் பி-யில், தென் ஆப்பிரிக்கா விளையாடிய அனைத்து போட்டியிலும் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா போட்டி மழையால் கைவிடப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காமல் அரையிறுதியில் களம் காண்கின்றன.

முதல் அரையிறுதி போட்டி துபாயில் மார்ச் 4ஆம் தேதியும், இரண்டாம் அரையிறுதி போட்டி மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Source Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *