இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இந்த மாபெரும் தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார் நிறுவனங்கள், 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த முகாமில் பங்கேற்றன. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் ஆகியவையும் வழங்கப்பட்டது. இது தவிர, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்குப் பதிவு வழிகாட்டுதல்கள் மற்றும் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். இந்த நிகழ்வில் பங்கு கொள்ள வருகை தந்த வேலை தேடுபவர்களின் விபரங்களை ஒரு விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்து, அந்த தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றியதின் பின்னர், தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆற்றுக்கு நடுவில் பிரம்மாண்டத் தீவு… நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா…
அங்கு உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் வந்த அதிகாரிகள் தேர்வுகளின் மூலம் அவர்கள் நிறுவனங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்தனர். இந்தத் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு ஆணைகள் வழங்கினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.