அதனடிப்படையில் பார்க்கும்போது வைபவ்வுக்கு தற்போது 14 வயது ஆகிறது. அவருக்கு அடுத்த ஆண்டு, அதாவது மார்ச் 27, 2026 அன்று 15 வயது நிறைவடையும். அப்படியென்றால் வைபவ் இன்னும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டுமா என்றால் ஒரு வழி இருக்கிறது. ஆனால், அதற்கு பிசிசிஐ மனது வைக்க வேண்டும். ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட குறைந்தது 15 வயது இருக்க வேண்டும் என விதி வகுத்துள்ள ஐசிசி, விதிவிலக்கையும் கொடுத்துள்ளது. அதாவது 15 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரரை விளையாட வைக்க விரும்பினால் அதனை சம்பந்தப்பட்ட நாடு ஐசிசியிடம் கோரிக்கையாக வைக்கலாம். ஆனால் ஒரு வீரரின் விளையாட்டு அனுபவம், மன வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டின் தேவைகளை கையாளும் திறன் கொண்டவை என்று ஐ.சி.சி உணர்ந்தால் மட்டுமே, அந்த வீரர் 15 வயதுக்கு கீழ் இருந்தாலும் தேசிய அணிக்காக விளையாட அனுமதிக்க முடியும்.