Last Updated : 29 Mar, 2020 09:57 AM

Published : 29 Mar 2020 09:57 AM
Last Updated : 29 Mar 2020 09:57 AM

தொகுப்பு: தமிழ்

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.

சோளமாவு முறுக்கு

நான்கு கப் வெள்ளைச் சோள மாவில் ஒரு கப் கடலை மாவு, 2 டீஸ்பூன் வெண்ணெய், 1 டீஸ்பூன் காரப்பொடி (தேவையென்றால்), தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் எள் அல்லது சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள்.

இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்தெடுங்கள். வெண்ணெய் வேண்டாம் என்றால் எண்ணெய்யைக் காய்ச்சி சேர்க்கலாம்.

FOLLOW US


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *