தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காடுகளின் பரப்பு
மேலும் அங்குள்ள பசுமை பரப்பு அதாவது காடுகளின் அளவு 2017ம் ஆண்டைவிட 2019ம் ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது அங்கு 5.3 சதவீதம் காடுகள்தான் உள்ளது. தற்போது தூத்துக்குடியின் வெப்பநிலை 39 டிகிரி சென்டிகிரேட் உள்ளது. காற்றின் தரம் 78 என்று தான் உள்ளது. அது மோசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தரம் குறைந்த காற்றை நாம் சுவாசிப்பதால், மூச்சுத்திணறல், இருமல், தொண்டை எரிச்சல் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். எனவே பருவ நிலை மாற்ற பாதிப்புக்களை களைய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.