விஜய் நடித்துள்ள தி கோட் படத்துடைய ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் குறித்த சமூக வலைதள பதிவு கவனம் பெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள தி கோட் என்ற படத்தில் நடிகர் விஜய் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்துடைய ட்ரெய்லர் மிகப் பெறும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தி கோட் படத்துடைய சென்சார் சான்றிதழ் ரிசல்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி இந்த படத்துக்கு யு ஏ சான்றிதழை தணிக்க அதிகாரிகள் வழங்கியுள்ளார்கள். இந்நிலையில் படத்துடைய சென்சார் சர்டிபிகேட் தகவல்களைக் கொண்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
#GOAT Censor Certificate ( U/A )
Runtime : 2 Hrs 59 Mins pic.twitter.com/dGYja1NbW8
— Ayyappan (@Ayyappan_1504) August 23, 2024
இதில், கோர்ட் திரைப்படம் 179 நிமிடம் 39 வினாடிகள் ரன்னிங் டைமிங் கொண்டது என்றும் படத்தில் 7 இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Exclusive Stills From #GOAT 🐐 pic.twitter.com/xYM9bkFyB9
— Ayyappan (@Ayyappan_1504) August 24, 2024
படம் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியது என்பதால் விஜய் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
.