வேலை தேடும் இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகத் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதம் தோறும் இந்த முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் டிசம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை அருப்புக்கோட்டை தேவாங்கா கலைக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் டிசம்பர் 21ஆம் தேதி அருப்புக்கோட்டை தேவாங்கா கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: PWD Vacancy: பொதுப்பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…
இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ள நிலையில், வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
யார் பங்கு பெறலாம்? 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி வரை படித்த 18 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பங்கு பெறலாம். பங்கு பெறுவோர் தங்களின் கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கலந்து கொள்வோர் vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.