திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் என்ஐடி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி மற்றும் என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: திருச்சி என்ஐடியில் தற்போது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Ministerial) பணிக்கு 5 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Technical) பணிக்கு 5 பேர் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளம்பரம்

இதையும் படிங்க: CMC Vellore: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்கக் கடைசி நாள் எப்போது..?

கல்வி தகுதி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Ministerial) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து பை்பிங் மற்றும் கம்ப்யூட்டர் அறிவை பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிசில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Technical) பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டொக்னாலஜி என்ஜினீயரிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், எச்டிஎம்எஸ், சிஎஸ்எஸ், ஜேஎஸ், LAMP உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

விளம்பரம்

சம்பளம்: இந்த 2 பணிகளுக்கான மாதசம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பில் Minimum Wages Act – Skilled அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் 6 மாதம் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் திறமை மற்றும் தேவையை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் www.nitt.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *