Sukran Transit 2024: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், பெருமை, செழுமை, காதல், சொகுசு மற்றும் திருமண வாழ்க்கையின் காரணியாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சுக்கிரனின் உயர்ந்த நிலை ஒரு நபரை வறுமையில் இருந்து நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லும். சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.